Sunday, 7 January 2018

அவ்வை சண்முகி பட குழந்தை நட்சத்திரத்தின் இன்றைய நிலை என்ன தெரியுமா?


அவ்வைசண்முகி படத்தில் கமல் மற்றும் மீனாவின் குழந்தையாக நடித்தவர் ஆன்னி. அந்த படத்தில் இவரின் குறும்புதனமான நடிப்பு இன்றும் ரசிக்க வைக்கும்படியாக இருக்கும். இவர் இன்றும் சென்னையில்தான் வசித்து வருகிறார்.

அவ்வை சண்முகி படத்தில் கொழுக் மொழுக் பேபியாக இருந்து இவர் இன்று ஹாலிவுட் ஹீரோயினி போல இருக்கிறார். அவ்வை சண்முகி படத்தில் குழந்தை நட்சத்திரம் வேண்டும் என்று தேடியபோது டான்ஸ் மாஸ்டர் ரகுராம்தான் ஆன்னியை கமலிடம் அறிமுகப்படுத்தினாராம். கமலுக்கு பிடித்துபோகவே அந்த படத்தில் நடிப்பில் பின்னி எடுத்திருப்பார்.

இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவருக்கு பல பட வாய்ப்புகள் வந்தது. ஆனால் அவரது அம்மாவுக்கு ஆன்னியை நடிக்க வைக்க விருப்பம் இல்லை. ஆனாலும் 3 படங்கள் மற்றும் சில விளம்பர படங்களில் மட்டும் நடித்து விட்டு இந்த இன்டஸ்ட்ரிக்கே முழுக்கு போட்டு விட்டாரம்.

சென்னை லயோலா கல்லூரியில் படிக்கும் போதே உலகின் நம்பர் ஒன் பிசினஸ் கல்லூரியில் ஐஈஎப்சி ஸ்காலர்ஷிப்புடன் படிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த கல்லூரியில் படிக்க ஸ்காலர்ஷிப் வாங்கிய ஒரே மாணவியும் இவர்தான்.

படித்து முடித்த பின்னர் இந்தியா வந்த அவர் சிறிது நாட்கள் ரியல் எஸ்டேட் வேலையில் இருந்தார். பின்னர் வேறு வேறு கம்பெனியில் வேலை பார்த்தார். ஆனால் இவை அனைத்துமே சினிமாவுக்கு சம்பந்தம் இல்லாதது.

ஆடுகளம் படத்தில் டாப்சி செய்த கேரக்டருக்கான வாய்ப்பு இருவருக்குதான் வந்தது. ஆனால் படிப்புதான் முக்கியம் என்று பிரான்ஸ் பறந்து விட்டார்.

தற்போது சாப்ட்வேர் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். சினிமாவுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத தொழில் என்பதால் இவருக்கு சினிமா நண்பர்கள் யாரும் கிடையாது. சினிமா கதாநாயகிக்கு உரிய அதைத்து அம்சங்கள் இருந்தும் ஒதுங்கியே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: