Monday, 22 January 2018

ரயிலில் இருந்து குதித்து பிரபல இளம் நடிகர் தற்கொலை? சோகத்தில் திரையுலகம்...!!


மராத்திய மொழியில் பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர் பிரபுல் பொலிரோ. இவர் நேற்று முன்தினம் அதிகாலை 4.30 மணி அளவில் தொங்கியபடி பயணம் செய்துள்ளார்.

ரயிலானது மும்பையின் மலாட் ரயில் நிலைய நடைமேடைக்கு வந்தடைந்த பின்னர் மீண்டும் புறப்பட்டு சென்றது. ரயில் புறப்பட்டபோது ரயிலுக்கும் நடைமேடைக்கும் நடுவில் உள்ள தண்டவாளத்தில் கீழே விழுந்தார்.

இதனை பார்த்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இவர் ஏன் அதிகாலை நேரத்தில் ரயிலில் பயணம் செய்தார். தவறி கீழே விழுந்தாரா அல்லது தற்கொலை செய்யும் நோக்கத்தில் கீழே குதித்தாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: