Wednesday, 17 January 2018

மலேசிய மக்களிடம் வாங்கி கட்டி கொண்ட தமிழ் நடிகர்கள்..! அவர்களிடம் பருப்பு வேகவே இல்லை...!!


நடிகர் சங்க கட்டிடத்தை கட்டுவதற்காக சமீபத்தில் மலேசியாவில் நட்சத்திர கலைவிழா நடத்தப்பட்டது. மலேசியாவில் கலைநிகழ்ச்சிகள் நடத்தினால் மக்கள் திரண்டு வருவார்கள். நிதி குவியும் கட்டிடத்தை கட்டி விடலாம் என கணக்கு போட்டனர்.

ஆனால் அவர்கள் நினைத்தது நடக்கவில்லை. இந்த நட்சத்திர கலைவிழாவுக்கு மக்கள் ஆதரவு அளிக்கவில்லை. நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். அவர்கள் கட்டிடம் கட்ட நாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ஏன் கொடுக்க வேண்டும்.

அவர்களே பணம் போட்டு கட்டி கொள்ளட்டுமே என்று புறக்கணித்து விட்டனர். கலைநிகழ்ச்சி நடந்த ஸ்டேடியத்தில் சுமார் 1 லட்சம் பேர் வரை அமர வசதி இருந்தது. ஆனால் அந்த கேலரியில் ஒன்றிரண்டு பேர் மட்டுமே வந்திருந்தனர்.

இதனால் கலைநிகழ்ச்சி நடத்த போனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ரஜினி கமலை அழைத்து போய் கூட அவர்களின் பருப்பு வேகவில்லை. மேலும் இந்த கலைநிகழ்ச்சிக்கு அந்நாட்டு ஊடகங்கள் கூட கடுமையாக சாடி இருந்தது.

ஏற்கனவே சென்னை இதே போல நட்சத்திர கிரிக்கெட் நடத்தினார்கள். அதற்கும் மக்களிடம் ஆதரவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: