ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர் ஆலிவுட் நடிகை ஜெசிகா பால்கோல்ட். இவருக்கு வயது 29. இவர் தனது பெற்றோர் மற்றும் தங்கையுடன் சிட்னி நகரில் காரில் சென்று கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது அவ்வழியே எதிரே வந்த கார் இவர் வந்த கார் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இதில் அந்த நடிகை ஜெசிகா மற்றும் உடன் சென்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஜெசிகாவின் தந்தை லாட்ஸ் (69), தாயார் விலியன் (60) மற்றும் தங்கை அன்னபெல்லி பால்கோல்ட் ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டனர்.
மேலும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஜெசிகாவும் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 comments: