Monday, 22 January 2018

ஹலோ.. நானும் அரசியலில்தான் இருக்கேன்..! கெத்து காட்டும் பிரபல நடிகர்...!!


நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்து விட்டார். தனிக்கட்சி தொடங்குவதற்கான நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகிறார். அதே போல நடிகர் கமல்ஹாசனும் பிப்ரவரி 21ம் தேதி புதிய கட்சியை ஆரம்பிக்க போவதாக அறிவித்து உள்ளார்.

நடிகர்களின் புதிய கட்சி காரணமாக சினிமா மற்றும் அரசியல் களம் பரபரப்பாக மாறி உள்ளது. ரசிகர்களும் யார் பக்கம் போவது என குழம்பி போய் உள்ளனர்.

இந்த நிலையில் திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின். இவர் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார். இவரிடம் அரசியல் குறித்து கேட்கப்பட்டது.

அப்போது அவர் கூறும்போது, நான் ஏற்கனவே திமுகவுக்கு வாக்கு சேகரித்து இருக்கிறேன். இடையில் சினிமாவில் நடித்ததால் சிறிது நாள் இடைவெளி விட்டேன்.

இனி மீண்டும் தீவிர அரசியலில் இறங்க உள்ளேன். திமுகவுக்காக வாக்கு சேகரிப்பேன். நான் இன்னும் அரசியலில்தான் இருக்கிறேன் என்றார்.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: