Saturday, 20 January 2018

பாலியல் தொல்லை குறித்து நடிகைகள் ஏன் பேசுவதில்லை தெரியுமா..! ராதிகா ஆப்தே வருத்தம்...!!


சினிமாவில் நடிகைகள் படுக்கையை பகிர்ந்தால் மட்டுமே வாய்ப்பு என்றொரு நிலை உள்ளது. இதனை சில நடிகைகள் மட்டுமே தைரியமாக கூறுகின்றனர். மற்றவர்கள் கூறுவதில்லை.

இது குறித்து நடிகை ராதிகா ஆப்தே கூறும்போது, பாலியல் தொல்லை குறித்து யாரும் வாயை திறப்பதே இல்லை. ஏனென்றால் அப்படி பேசினால் அவர்களின் எதிர்காலம் நாசமாகி விடும். அவர்களின் கனவும் கனவாகவே போய்விடும்.

இதனால்தான் அவர்கள் இது குறித்து வாய் திறப்பதில்லை. பாலியல் தொல்லை குறித்து தைரியமாக பேச வேண்டும். இல்லை என்றால் அதனை நிறுத்த முடியாது. பேசினால் மட்டும் போதாது. முடியாதுத என்று கூற வேண்டும்.

எனக்கு மோசமான பாலியல் தொல்லை எதுவும் நடக்கவில்லை. எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்கள் குறித்து ஏற்கனவே நான் கூறி விட்டேன். நான் எதையும் மறைக்க மாட்டேன். அதே நேரம் மற்றவர்களின் பாலியல் தொல்லை குறித்து நான் எதுவும் பேச மாட்டேன் என்றார்.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: