மருதுகணேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தி.மு.க. ஒரு ஜனநாயக கட்சி. இங்கு முறைப்படித் தான் எல்லாம் நடக்கும். அதன்படி வேட்பாளர் தேர்வு நடந்தது.
இந்த தேர்தலில் பிரசாரமே செய்யத் தேவையியில்லை. ஏனெனில் கடந்த முறையே எல்லா பிரச்சினைகள் பற்றியும் முன்கூட்டியே பிரசாரம் செய்து விட்டோம்.
இங்கு நிலவும் பிரச்சினைகளை எல்லாம் கட்சி மூலம் கொண்டு செல்வோம். மழை காலத்தில் வெள்ளம் செல்ல சரியான கால்வாய் வசதி இல்லை.
மெட்ரோ ரயில் பணியால் போக்குவரத்து நெருக்கடி, சுத்தமான குடிநீர் இல்லை.
இந்த தொகுதியில் வசிக்கும் மக்களில் பெரும் பாலானவர்கள் ஏழ்மையில் உள்ளனர். அவர்கள் ஏன் ஏழ்மையிலேயே இருக்கிறார்கள். இங்கு வெற்றி பெறுவர்கள் தொகுதியில் வசிப்பது இல்லை.
நான் இங்கு மீண்டும் போட்டியிடுவதால் பணம் பெரிய பிரச்சினையாக நினைக்கவில்லை. ரூ.5 லட்சம் மட்டும் இருந்தால் போதும். மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதால் நெடுஞ்சாலையில் யாரும் கட்சி அலுவலகம் தொடங்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

0 comments: