இதனை தொடர்ந்து தலைமறைவாக உள்ள அன்பு செழியனை போலீசார் தேடி வருகின்றனர்.
இன்று தமிழ் சினிமாவில் புழங்கக் கூடிய 70 சதவீத பணம் அன்பு செழியனுடைய என்று கூறப்படுகிறது.
அந்த அளவுக்கு பெரிய பைனான்சியராக உள்ளார். இவர் ரஜினி படம் என்றால் 100 கோடி வரை கடன் கொடுப்பார்.
அதே கமல், அஜித், விஜய் படம் என்றால் 50 கோடி வரை கடன் கொடுப்பாராம். மேலும் சூர்யா, விஜய் சேதுபதி என நடிகர்களின் மார்க்கெட்டை பொறுத்து 30 கோடி வரை பணம் கொடுப்பாராம்.
ஒரு வங்கியால் கூட இவ்வளவு பணத்தை கொடுக்க முடியாதபோது இவர் எப்படி கொடுக்கிறார்.
சாதாரண நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த அன்பு செழியன் ஒரு படத்திற்கு 100 கோடி வரை பணம் கொடுக்கும் அளவிற்கு வளர்ந்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆரம்பத்தில் சின்ன அளவில் பைனான்ஸ் செய்து வந்த இவர், அரசியல்வாதிகளின் அறிமுகம் கிடைக்கவே அவர்களின் கறுப்பு பணம் இவரிடம் புழங்க ஆரம்பித்துள்ளது.
இன்றுள்ள பல அரசியல்வாதிகளின் கறுப்பு பணம் மற்றும் ஊழல் பணம் அனைத்தும் அன்பு செழியன் வசம் உள்ளது. இவர் சினிமாவில் வட்டிக்கு விட்டு அரசியல்வாதிகளுக்கு வெள்ளையாக மாற்றி தருகிறாராம்.
அரசியல்வாதிகள் மட்டும் அல்லாமல் தொழிலதிபர்களும் பணத்தை கொடுத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால்தான் இவர் இன்று தமிழகத்தின் சுவிஸ் வங்கியாக செயல்பட்டு வருகிறார். இவர் நினைத்தால் 5 நிமிடத்தில் 5 கோடி முதல் 50 கோடி வரை திரட்ட முடியும் என்கிறார்கள்.
அரசியல்வாதிகளின் பினாமியாக இருப்பதால்தான் அவர்கள் யாரும் அன்பு செழியன் பற்றி இதுவரை வாய் திறக்கவில்லை என கூறப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் சசிகலாவின் பினாமி எனவும் கூறப்படுகிறது.
இதனால்தான் காவல்துறையின் சப்போர்ட்டும் உள்ளதாக திரையுலகில் பேச்சு நிலவி வருகிறது.

0 comments: