Sunday, 26 November 2017

இலங்கை பந்துவீச்சை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள்… 610 ரன்களில் டிக்ளேர்


இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 610 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி, இந்திய அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது.
இதில் முதலில் பேட்டிங் செய்த  இலங்கை அணி முதல் இன்னிங்சில் 250 ரன்களுக்கு ‘ஆல் அவுட்டானது.’
இதனையடுத்து முதல் இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணிக்கு, கே.எல் ராகுல் 7 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார்.
அடுத்ததாக ஜோடி சேர்ந்த புஜாரா – விஜய் ஜோடி நங்கூரமாக நின்று இலங்கையின் பந்துவீச்சை பதம் பார்த்தனர். விஜய் 218  ரன்களிலும், புஜாரா 143 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.
அடுத்ததாக வந்த கேப்டன் கோஹ்லி இரட்டை சதம் கடந்து 213 ரன்களும்,   ரோஹித் சர்மா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 102* ரன்களும் எடுத்து கைகொடுத்தன் மூலம் 6 விக்கெட் இழப்பிற்கு 610 ரன்கள் எடுத்த இந்திய அணி,405 ரன்கள் முன்னிலையுடன் டிக்ளேர் செய்துள்ளது.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: