இங்கிலாந்து ஆஸ்திரேலியா இடையேயான வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி, ஆஸ்திரேலியாவின் கப்பாவில் நடைபெற்று வருகிறது.
இதில் 137 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்றைய மூன்றாவது இன்னிங்ஸை துவங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு அந்த அணியின் கேப்டன் ஸ்மித் வழக்கம் போல் சதம் அடித்து கைகொடுத்தார். டெஸ்ட் அரங்கில் ஸ்மித்தின் 21வது சதம் இதுவாகும்.
இதன் மூலம் டெஸ்ட் அரங்கில் குறைந்த இன்னிசில் 21 சதங்களை விளாசிய வீரர்களின் பட்டிலில் ஜாம்பவான் சச்சினை (110 இன்னிங்ஸ்) பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடம் பிடித்தார்.
இப்பட்டியலில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன் (56 இன்னிங்ஸ்), முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் (98) முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.

0 comments: