இவர் தற்போது குடிக்கும் ஒரு கப் டீயின் விலையே ரூ 15 லட்சம் என செய்திகள் வெளியாகி இருந்தது. இது மற்றவர்களை பொறாமைபடவும் வைத்தது.
நீத்தா அம்பானி என்னவே பரம்பரை கோடீஸ்வரி அல்ல. சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். மும்பையின் பறநகர் பகுதியை சேர்ந்த இவர் வணிகவியலில் பட்டம் பெற்று தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்தார்.
பரதநாட்டியம் கற்று கொண்ட நீத்தா பல நாடுகளுக்கு சென்று நடனமாடுவார்.
அப்படி நடனமாடிய ஒரு நிகழ்ச்சியில் நீத்தாவை பார்த்த முகேஷ் அம்பனியின் தந்தை தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார். அதன்படியே திருமணமும் செய்து வைத்து விட்டார்.
திருமணத்திற்கு பிறகும் நீத்தா ஆசிரியை பணியை தொடர்ந்தார். அப்போது அவருடைய சம்பளம் வெறும் 800 ரூபாய் மட்டுமே. தற்போது மும்பையில் திருபாய் அம்பானி என்ற பள்ளியை நடத்துவதோடு அதன் நிர்வாகியாகவும் உள்ளார்.

0 comments: