Saturday, 25 November 2017

எடப்பாடிக்கு அழைப்பு.. பன்னீருக்கு நோ சொன்ன மதுரை அதிமுகவினர்! அதிர்ச்சியில் ஓபிஎஸ் அணி!!



மதுரையில் அதிமுக கொடி கம்பம் ஏற்றும் விழாவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டும் அழைப்பு விடுத்துவிட்டு, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை புறக்கணித்த சம்பவம் அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் அதிகாரபூர்வ சின்னமான இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் ஓபிஎஸ், இபிஎஸ் அணிக்கு வழங்கியது.
இதனையடுத்து அதிமுகவின் பெயர், மற்றும் சின்னம் கிடைத்ததால் மாவட்டம் தோறும் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியில் அதிமுக சார்பில் 100 அடி உயரத்தில் அக்கட்சியின் கொடி கம்பம் இன்று ஏற்றப்பட்டது.
இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு கொடி ஏற்றி வைத்தார். இந்த விழாவிற்கு ஓபிஎஸ்க்கு இன்று காலைதான் அழைப்பு விடுக்கப்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
எனவே ஓபிஎஸ் அணியினருக்கு தொடர்ந்து கட்சியில் புறக்கணிக்கப்பட்டு வருவது இதன் மூலம் தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: