ஆனால் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது அதற்கான காலம் இன்னும் வரவில்லை என்று கூறிய சம்பவம் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இன்று நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்து இருக்கிறார்.
அதில் அரசியலுக்கு வரவேண்டிய அவசரம் தற்போது இல்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் களத்தில் இறங்க காலம் இருக்கிறது என்றும் தெரிவித்து இருக்கிறார். இதனால் அவர் அரசியலுக்கு வருவது உறுதி என்று நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
இந்நிலையில் அவர் பேட்டியின் போது பிறந்த நாளில் போது ரசிகர்களை சந்திக்க போவதாக கூறினார். அவர் இந்த ரசிகர்களை சந்திக்கும் திட்டம் அரசியல் பிரவேசத்துக்கும் போடும் முன்னோட்டம் என்று சொல்லப்படுகிறது. இதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

0 comments: