தர்மபுரி மாவட்டம் பெரிச்சாகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் வஜ்ஜிரம் . இவருடைய 14 வயது மகள் அரசு மேல்நிலைபள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இவரை பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் தொடர்ந்து தேடிவந்தனர். இந்நிலையில் பெரிச்சாகவுண்டம்பட்டி அருகே உள்ள பாலத்தின் அடியில் இவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது .
சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசார் நடத்திய விசாரணையில் மாணவி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து மாணவியின் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றில் 8 மாத குழந்தை இருப்பதை கண்டு அதிர்ச்சியில் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே போலீசார் விசாரணையை தீவிரபடுத்தினர். அப்போது மாணவி வீட்டிற்கு பிரதாப் என்ற வாலிபர் அடிக்கடி சென்று வந்துள்ளார்.
இதனால் அவரைபோலீசார் தேடியநிலையில் அவர் போலீசில் சரணடைந்தார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் மாணவிக்கு பிரதாப் சகோதரர் முறை என்பதால் அடிக்கடி சென்று வந்துள்ளார். யாரும் சந்தேகப்படாததால் இதனை சாதகமாக பயன்படுத்திய பிரதாப் மாணவியிடம் காதலிப்பதாக பலமுறை தனிமையில் இருந்துள்ளார்.
இதனால் கர்ப்பமான மாணவி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.
என்ன செய்வது என்று திகைத்த பிரதாப் மாணவியை கொலை செய்ய திட்டம் தீட்டி வரை பலாத்திற்கு அடியில் அழைத்து சென்று நீரில் மூழ்கடித்து கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.
பின்னர் உடலை பாலத்தில் அடியில் வீசிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் தன்னை போலீசார் தேடுவதை அறிந்த பிரதாப் போலீசில் சரண் அடைந்து விவரத்தை கூறியதாக போலீசார்வ் தெரிவித்தனர்.

0 comments: