Saturday, 25 November 2017

தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை கொடுங்க.. உயர்நீதிமன்றம்!



தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 20 சதவீதம் முன்னுரிமை கொடுங்க என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் படித்தவர்களுக்காக தமிழக அரசு கடந்த 2010-ம் ஆண்டு ஒரு அரசாணையை வெளியிட்டு இருந்தது.
ஆனால், அந்த அரசாணையை தமிழக அரசு இதுவரைக்கும் முறையாக பின்பற்றவில்லை என திருவண்ணாமலையை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: முதுநிலை வரை தமிழில் படித்த தனக்கு தமிழக அரசு உரிய வேலைவாய்ப்பு வழங்கவில்லை. தமிழக அரசு பிறப்பித்த அரசாணையும் முறையாக பின்பற்றவில்லை என குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், 2010-ல் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
அதன்படி, தமிழில் படித்தோருக்கு அரசு வேலை வாய்ப்பில் கட்டாயம் 20 சதவீதம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
இதன் மூலம் தமிழில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் அரசு பின்பற்றுமா?

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: