Monday, 27 November 2017

கடலில் மிதக்கும் காற்றாலைகள்


கடலில் மிதக்கும் காற்றாலைகள், உலகிலேயே முதன்முறையாக, அயர்லாந்து நாட்டில், சமீபத்தில் செயல்பட துவங்கி உள்ளன. கடலுக்குள் காற்றாலைகள், ஏற்கனவே சில நாடுகளில் அமைக்கப்பட்டு இருந்தாலும், அவை, ஆழமில்லாத கடல் பகுதிகளாக பார்த்துத் தான் கட்டு விக்கப்படுகின்றன.

ஆனால், அயர்லாந்தில் அமைக்கப்பட்டிருக்கும், 'ஹை விண்ட்' காற்றாலை பண்ணை, அசலாகவே, கடல்நீரில் மிதக்கிறது. ஸ்காட்லாந்தில் உள்ள, அபெர்தீன்ஷயர் நகரின் கடற்கரையில் இருந்து, 25 கி.மீ., தொலைவில், கடலில் மிதக்கும்படி, ஐந்து ஹை விண்ட் காற்றாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

கரையை விட, கடலுக்குள் காற்றின் வேகம் அதிகம். எனவே, 830 அடி உயரம் உள்ள இந்த ஆலைகளால், மொத்தம், 30 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இந்த மின்சாரம், 22 ஆயிரம் வீடுகளின் பயன்பாட்டுக்கு போதுமானது.

கடலின் ஆழம், 2,600 அடிகள் இருந்தால் கூட, இந்த மிதவை காற்றாலைகளால், செம்மையாக இயங்க முடியும். இத்திட்டம், வெறும் முன்னோட்டம் தான். விரைவில் சோதனை முடிந்ததும், அயர்லாந்து மேலும் பல மிதவை காற்றாலைகளை மிதக்க விடத் திட்டமிட்டு உள்ளது.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: