Tuesday, 28 November 2017

நான் ஜெயலலிதா பொண்ணுதான்.. இது ஓபிஎஸ்க்கு தெரியும்.! பரபரப்பை கிளப்பும் அம்ருதா.!


பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்ற பெண் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் நான் உண்மையான ஜெயலலிதா மகள். இதனை நிருபிக்க எனக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய உத்தரவிடவேண்டும் என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இவரது மனுனை விசாரித்த நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் எனவும் உத்தரவில் கூறியிருந்தது.

இந்நிலையில், தனியார் செய்தி சேனலுக்கு அம்ருதா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நான் தான் ஜெயலலிதா மகள் என்று அனைவருக்கும் தெரியும். இது துணை முதலமைச்சராக இருக்கும் பன்னீர்செல்வத்துக்கும் தெரியும்.

நான் ஜெயலலிதாவை போயஸ்கார்டன், திராட்சை தோட்ட பங்களா மற்றும் தலைமை செயலகத்தில் அடிக்கடி சந்தித்து பேசியுள்ளோம்.
இதனை வெளியில் சொன்னால் எனது உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்பதால் பலருக்கு இந்த உண்மை தெரியவில்லை.

மேலும், எனது உயிருக்கு சசிகலா குடும்பத்தால் அச்சுறுத்தல் உள்ளது எனவும் தெரிவித்திருந்தார். இவரது பரபரப்பான பேட்டியும், மனுத்தாக்கலும் மேலும் பரபரப்படைய செய்துள்ளத.
இன்னும் எத்தனை பேர்தான் ஜெயலலிதா வாரிசுனு சொல்லிட்டு வராங்களானு பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: