இந்திய கிரிக்கெட் அணி மற்றும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செல்லப்பிள்ளையான சுரேஷ் ரெய்னா – தோனி இடையேயான நட்பு நாம் அறிந்ததே.
குட்டி தல என்று அழைக்கப்படும் அளவிற்கு தனக்கென பெரும் ரசிகர் படையை வைத்துள்ள சுரேஷ் ரெய்னா, சமீபகாலமாக தனது மோசமான ஃபார்ம் காரணமாக அணியில் இடம்பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் சுரேஷ் ரெய்னா அளித்துள்ள பேட்டி ஒன்றில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியுடனான தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
தோனி குறித்து பேசிய ரெய்னா “தோனி யார் மீதும் கோவமே கொள்ள மாட்டார் என்று பலரும் கூறுகின்றனர், ஆனால் உண்மையில் தோனி கேமரா முன்னாள் மட்டும் தான் தனது கோபத்தை வெளிப்படுத்த மாட்டார்,
ஒரு இடைவேளையின் போது தவறு செய்தவர் யாராக இருந்தாலும் அவரை ஒரு பிடி பிடித்துவிடுவார்” என்று தெரிவித்துள்ளார்.

0 comments: