Monday, 27 November 2017

வைட்டமின்களை அள்ளித்தரும் தங்க உருளை கிழங்கு!


பல வளரும் நாடுகளில், 'வைட்டமின் ஏ' சத்து குறைபாடுள்ளவர்கள் இருப்பது இன்றும் நீடிக்கிறது. இதை தடுக்க, இன்று அன்றாட உணவாகிவிட்ட உருளைக் கிழங்கை பயன்படுத்தலாம் என்று கருதுகின்றனர் விஞ்ஞானிகள்.

அமெரிக்காவின் ஒஹையோ மாகாண பல்கலைக் கழகம் மற்றும் இத்தாலிய பல்கலைக் கழக விஞ்ஞானிகள், மரபணு திருத்தம் மூலம் பொன்னிற உருளைக் கிழங்கை உருவாக்கி உள்ளனர்.

இந்த புதிய வகை உருளைக் கிழங்கை வெட்டிப் பார்த்தால், வழக்கமான வெளிர் நிற சதைப் பகுதிக்குப் பதிலாக, பொன் மஞ்சள் நிறத்தில் சதைப் பகுதி இருக்கிறது.

அது மட்டுமல்ல, இதில், 'புரோ வைட்டமின் ஏ' மற்றும் வைட்டமின் ஆகிய சத்துகள் செறிவாக உள்ளன. 'புரோ வைட்டமின் ஏ'வைத்தான் நம் உடல் செரிமானம் செய்து, 'வைட்டமின் ஏ' சத்தாக மாற்றிக் கொள்கிறது.

'வைட்டமின் ஏ' சத்து, இளம் வயதில் கண் பார்வை பறி போவதைத் தடுக்கக்கூடியது.
மேலும், தொற்றுகளை எதிர்க்கும் சக்தியை உடலுக்குத் தருகிறது.
கருவுற்ற பெண்களுக்கு ஆரோக்கியமான குழந்தையைப் பெறவும், 'வைட்டமின் ஏ' முக்கியம்.'வைட்டமின் இ' சத்து நரம்புகளுக்கும், தசைகளுக்கும் வலுவைத் தர உதவுகிறது.

பொன்னிற உருளைக் கிழங்குகள் இத்தகைய நன்மைகளை எளிய மக்களுக்கும் கொண்டுபோய் சேர்க்க உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: