Monday, 27 November 2017

விரைவில் மட்கும் பிளாஸ்டிக் பாட்டில்!


பிளாஸ்டிக் கழிவுகள் ஆறு, ஏரி, கடல் போன்ற நீர்நிலைகளை மாசுபடுத்தி வருகின்றன. மறு சுழற்சி முறையை பரவலாக கடைபிடிக்கும் பிரான்ஸ் போன்ற நாட்டில் கூட, பெட்ரோலியப் பொருட்களால் தயாராகும் பிளாஸ்டிக் பொருட்களில், 45 சதவீதம் மறுசுழற்சி செய்யப்படாமல் நேரடியாக குப்பைக்கூளமாக நீர்நிலைகளில் கலந்து சுற்றுச்சூழலை பாதிக்கின்றன.

இந்த நிலையில், பிரான்சின் முன்னணி பிளாஸ்டிக் பாட்டில்களைத் தயாரிக்கும், 'லைஸ் பேக்கேஜிங்' அண்மையில், 'வேகன் பாட்டில்' என்ற புதிய வகை பிளாஸ்டிக் பாட்டில்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

வேகன் பாட்டில்கள் உயிரி பிளாஸ்டிக்குகளால் தயாரிக்கப்பட்டவை. அதாவது, இந்த வகை பிளாஸ்டிக்குகள் இயற்கையான பொருட்களைப் போலவே, மண்ணில் புதைந்ததும் விரைவில் மட்கிப் போகும் தன்மை உடையவை. வேகன் பாட்டில்களின் மூடி, அதன் மேல் ஒட்டப்படும் லேபிள் ஆகியவையும் எளிதில் மட்கும் தன்மை உடையவை என்கிறது லைஸ் பேக்கேஜிங்.

எத்தனை நாட்களில் வேகன் பாட்டில் மட்கிப் போகும்? வெறும், 90 நாட்கள் போதும் என்கிறது அந்நிறுவனம். அதே சமயம், வேகன் பாட்டில்களை பல முறை மறு சுழற்சி செய்யவும் முடியுமாம்.

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத பொருட்களைத் தயாரிக்க, ஐரோப்பாவில் ஒரு பெரும் இயக்கமே ஆரம்பித்திருக்கிறது. வேகன் பாட்டில் அதன் முக்கிய மைல்கல் எனலாம்.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: