திருச்சியில் சின்னம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பேசியதாவது: கட்சியின் உண்மைத் தொண்டர்கள் எங்கள் பக்கமே இருக்கிறார்கள்.
ஆட்சியைக் கையில் வைத்துக்கொண்டு வெற்றுக்கூச்சல் போட்டுவரும் ஈ.பி.எஸ் -ஓ.பி.எஸ் இருவருக்கும் இனி அரசியலில் இடம் இல்லை.
துரோக அரசியல் செய்யும் இருவரும் விரைவில் வருங்கால அரசியலில் இருந்தே காணாமல் போவார்கள் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
பன்னீரிடம் இருப்பது சிறிய கூட்டமே. அதை விட சிறிய கூட்டமே எடப்பாடியிடம் இருக்கிறது.
அவர்கள் இருவரும் இணைவதால் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. எம்.ஜி.ஆருக்கும் இது போல சிக்கல் ஏற்பட்ட போது உண்மைத் தொண்டர்கள் தான் அவர் பக்கம் இருந்தார்கள்.
அதே போன்று எங்களிடம் இருப்பது உண்மைத் தொண்டர்கள் அதனால் நாங்கள் கவலைப்பட போவதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

0 comments: