பெங்களூரில் வசிக்கும் லலிதா, தமிழ் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளதாவது:
ஜெயலலிதா எனது அம்மாவின் அண்ணன் மகள் ஜெயலலிதாவுக்கு ஒரு காண்க்ட் இருந்தது தெரியும்.
மேலும் ஜெயலலிதாவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது உண்மைதான் . எங்கள் பெரியம்மாதான் அவருக்கு பேறுகாலம் பார்க்க உதவி செய்தார்.
இந்த விஷயத்தை வெளியே தெரிவிக்க கூடாது என ஜெயலலிதா சத்தியம் வாங்கி வைத்திருந்தார்.
குழந்தை பேறுகால நேரத்தில் மட்டுமே உதவிக்காக எனது பெரியம்மாவை அழைத்தார்.
ஜெயலலிதாவின் சகோதரி சைலஜா தான் அம்ருதாவை வளர்த்தார். ஆனால் அந்த குழந்தை அம்ருதாவா என்பது உறுதியாக தெரியவில்லை.
அமிருதா தனது மனதில் ஜெயலலிதாவை தான் அம்மாவாக நினைக்கிறார். அவர் சொத்துக்காக ஆசைபடுவதாக தெரியவில்லை.
1980 களில் ஜெயலலிதாவுக்கு குழந்தை பிறந்தது அப்போது அவரது தாய் சத்யா இறந்துவிட்டார்.
அப்போது எனது பெரியம்மா மனிதாபிமான அடிப்படையில் பேறுகாலம் பார்க்க சென்றார்.
ஆனால் இதற்கான எந்த ஆதாரம் எங்களிடம் இல்லை. அம்ருதாவை டிஎன்ஏ டெஸ்ட் செய்தால் மட்டுமே அது ஆவணமாக அமையும். இவ்வாறு லலிதா தெரிவித்துள்ளார்.

0 comments: