விஜய் டிவியில் கலக்கப்பேவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். அதன்பிறகு இயக்குனர் பாண்டிராஜ் மூலம் மெரினா படத்தில் அறிமுகமானார். இவரின் படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்று ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
தற்போது சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் உச்சத்தை நோக்கி பயணிக்கும் நடிகராக உள்ளார். இவருடைய படங்களுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான பேமிலி ஆடியன்ஸ் மிகவும் அதிகம்.
இந்நிலையில், இவர் நடிப்பில் இன்னும் சில தினங்களில் வேலைக்காரன் படம் திரைக்கு வரவுள்ளது, இப்படம் சமீபத்தில் சென்ஸார் சென்று யு சான்றிதழ் பெற்றுள்ளது.
இதன் மூலம் தான் நடித்த மெரீனா படம் முதல் வேலைக்காரன் வரை தொடர்ந்து 10 படங்களுக்கும் யு சான்றிதழ் பெற்றுள்ளார். அதன்படி சிவகார்த்திகேயன் புதிய சாதனை படைத்துள்ளார்.

0 comments: