மெர்சல் படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு நடிகர் விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கான மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்த படத்திற்காக விஜய்யுடன் நடிக்க பல நடிகர், நடிகைகள் காத்திருக்கிறார்கள். அதிலும் அவருடன் ஜோடியாக நடிக்க முன்னணி நடிகைகள் முதல் அறிமுக நடிகைகள் வரை வெயிட்டிங்கில் உள்ளனர்.
அப்படியிருக்க விஜய் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் இப்படத்தில் ஒரு முக்கியமான ரோலில் ஓவியாவை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்தது. இற்காக அவரை அனுகியதாக கூறப்படுகின்றது.
ஆனால், என்ன காரணம் என்று தெரியவில்லை, அப்படத்தில் ஓவியா நடிக்க மறுத்துவிட்டதாக கிசுகிசுக்கப்படுகின்றது.
இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, தற்போது சமூக வலைத்தளங்களில் இச்செய்தி பெரும் வைரலாக பரவி வருகிறது.

0 comments: