Friday, 29 December 2017

நான் தான் ஐஸ்வர்யா ராயின் மகன்..! பீதியை கிளப்பும் 27 வயது வாலிபர்...!!


உலகறிந்த பிரபலமாக இருந்தாலே ஏதாவது வகையில் பிரச்னைகள் வரத்தான் செய்யும். மறைந்த ஜெயலலிதாவின் மகன் என்று கூறி ஒரு வாலிபர் சர்ச்சையை கிளப்பினார். பின்னர் அம்ருதா என்ற பெண் தான்தான் ஜெயலலிதாவின் மகள் என கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையில் உலக அழகி ஐஸ்வர்யா ராயின் மகன் என்று 27 வயது வாலிபர் ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அவரது பெயர் சங்கீத் குமார். இவர் மேலும் கூறும்போது, எனது தந்தை விசாகபட்டிணத்தை சேர்ந்த மவுலு ஆதிரெட்டி.

எனது தந்தை ஐஸ்வர்யா ராய் உதவியுடன் டெஸ்ட் டியூப் மூலம் என்னை பெற்றெடுத்தார். ஆரம்பத்தில் இரண்டு வருடம் ஐஸ்வர்யா ராய் குடும்பத்துடன் லண்டனில் வசித்தேன்.
அதன்பிறகு எனது தந்தை என்னை விசாகப்பட்டிணத்திற்கு அழைத்து வந்து வளர்த்து வருகிறார் என்றார்.

இவரிடம் தான் ஐஸ்வர்யா ராயின் மகன் என்பதற்கான எந்த ஒரு ஆவணமும் இல்லை. மேலும் இவர் சென்னையில் சவுன்ட் இன்ஜினியராக பணிபுரிவதாகவும் கூறி உள்ளார். 

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: