கலா மாஸ்டர் என்றாலே உடனே நினைவுக்கு வருவது அவரது குண்டான உடல் வாகுதான். ஆனால் கடந்த சில நாட்களாகவே கலா மாஸ்டர் உடல் மெலிந்து காணப்படுகிறார். இந்த தோற்றம் சிலருக்கு பார்க்க பரிதாபமாக தோன்றுகிறது.
உடல் எடை குறைப்பு குறித்து கலா மாஸ்டர் கூறும்போது, நான் 12 வயதிலேயே சினிமாவுக்கு வந்து விட்டேன். அப்போது மிகவும் ஒல்லியாக இருப்பேன். என்னை எல்லோரும் ஒல்லிக்குச்சி கலா என்றுதான் அழைப்பார்கள்.
மேலும் ஓயாத பணி காரணமாக சரியான நேரத்தில் சாப்பிட முடியவில்லை. காலை உணவை மதியமும், மதிய உணவை மாலை நேரத்திலும், இரவு டின்னரை நள்ளிரவு 12 மணிக்கும் சாப்பிட்டு வந்தேன்.
இதனால் எனக்கு தைராய்டு, உடல் எடை பிரச்னையால் அவதிப்பட்டேன். முதுகு வலி, மூட்டு வலி அதிகமாச்சி, வழக்கமான பணிகளில் ஈடுபட முடியவில்லை.
அதனால் டயட் இருக்க ஆரம்பித்தேன். கடந்த ஏப்ரல் மாதம் 78 கிலோ இருந்தேன். முதல் 4 வாரத்திற்கு எந்த ஒரு திட உணவையும் எடுத்து கொள்ளவில்லை. திரவ உணவை மட்டுமே சாப்பிட்டேன்.
யோகா, நடைபயிற்சி, கடுமையான உடற்பயிற்சி செய்தேன். இதன் பலனாக தற்போது 59 கிலோவாக குறைந்து விட்டேன். இன்னும் உடல் எடை குறைய வேண்டும் என்றார்.

0 comments: