தமிழகம் முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்படும் நிலையில் ரஜினியின் அரசியல் நிலைப்பாடு உள்ளது. இந்நிலையில் இன்று மீண்டும் இன்று ரசிகர்களுடன் தனது சந்திப்பை துவங்கியுள்ளார்.
வரும் டிசம்பர் 31 ல் தன் அரசியல் முடிவை தெரிவிப்பேன் என அவர் கூறியுள்ளார். இது குறித்து அரசியல் கட்சியை சேர்ந்த பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
நடிகர் எஸ்.வி.சேகர், ரஜினி வியூகம் அமைப்பதற்குள் போர் முடிந்துவிடும் என கூறியுள்ளார்.
ரஜினி அரசியலுக்கு வருவது, அவர் உடல்நலத்திற்கும், குடும்பத்திற்கும் நல்லதல்ல என்று அமைச்சர் ஓ.எஸ். மணியன் பேட்டி அளித்துள்ளார்.
அரசியலுக்கு வரமாட்டேன் என்று தான் டிச.31 ஆம் தேதி ரஜினி அறிவிக்கப்போகிறார் என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

0 comments: