கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவாகியுள்ள ஓகி புயல் அந்த மாவட்டத்தையே உருகுலைத்து போட்டுள்ளது.
மழையால் ஏற்பட்ட இதுவரை 5 பேரு பலியாகியுள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மையம் இயக்குனர் கூறியாதவது.
கன்னியாகுமரி பகுதியில் உருவாகியுள்ள ஓகி புயல் தீவிர புயலாக உருவெடுத்துள்ளது.
அதேபோல் அந்தமான் அருகே நிலவும் வலுவான காற்றாழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் காற்றாழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடமேற்கு திசையில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக தமிழகம் புதுச்சேரியில் மழை அல்லது கனமழை பெய்யக்கூடும். சென்னைவில் விட்டு விட்டு மழை பெய்யும் என அவர் தெரிவித்துள்ளார்.
அந்தமான் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளது என ஏற்கனவே செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

0 comments: