நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக இன்று அதிரடியாக அறிவித்தார். இது தமிழக அரசியரலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் ரஜினியின் அரசியல் வருகைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் அழகிரியும் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதுபோல அதிமுக அமைச்சர்கள் ஜெயக்குமார், ஓ.எஸ் மணியன், ஆகியோர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Ðபா.ஜவின் தமிழிசை உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர். மேலும் கமல், விவேக் உள்பட திரைபிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
இதற்கு முன்பு ரஜினிகாந்த் அரசியல் குறித்து வாய் திறக்காதபோது கடுமையாக விமர்சனம் செய்தவர்கள் எல்லாம் இப்போது வாய் வலிக்க வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பாட்ஷா பாணியில் சொல்லப்போனால் தாதாவின் கையில் முத்தம் கொடுத்து அவர் பின்னால் அணி வகுப்பது போல உள்ளது. ஏனென்றால் ரஜினியின் அரசியல் வருகையால் அனைத்து அரசியல் கட்சிகளுக்குமே பாதிப்பு ஏற்படும்.
ரஜினியின் என்ற ஒற்றை சொல் தமிழ் நாட்டில் ஆட்சி அமைக்க கூடிய அளவுக்கு பலம் வாய்ந்தவை. மேலும் ஜெயலலிதா இல்லாத அதிமுக, கருணாநிதி இல்லாத திமுகவின் எதிர்காலம் எப்படி இருக்கும் என கூற முடியாது.
இப்போதைய சூழலில் ரஜினியின் ஆளுமை பலமாக கோலோச்சக் கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே ஒரு சீட் போட்டு வைக்கலாம் என அரசியல் தலைவர்கள் போட்டி போட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

0 comments: