Monday, 25 December 2017

மக்களின் புருவத்தை உயர்த்திய வெற்றி.. தேசிய அளவில் பிரபலமான தினகரன்...!!


நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் தினகரன் அமோக வெற்றி பெற்றார். இவரது வெற்றி தமிழக மக்களின் புருவத்தையே உயர்த்த வைத்துள்ளது.

மேலும் அதிமுக மற்றும் திமுகவுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. அதிமுக எம்.எல்.ஏக்களில் பலர் தினகரன் அணி பக்கம் தாவ தயாராக உள்ளனர்.

இந்த தேர்தல் வெற்றியால் தினகரன் தேசிய அளவில் பிரபலம் அடைந்துள்ளார். இந்தியாவில் உள்ள அனைத்து பத்திரிக்கைகளிலும் தினகரன் வெற்றி குறித்த தகவலை முக்கிய செய்தியாக வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்பு ஜெயலலிதா இறந்த நேரத்தில் தினகரன் பெயர் பலமாக அடிபட்டு இருந்தாலும், இப்போது தேசிய அளவில் கவனிக்கப்படும் நபராக உருவெடுத்து வருகிறார் தினகரன்.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: