Friday, 1 December 2017

ஜூலிக்கு தனது படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த விஜய்..! என்ன கேரக்டர் தெரியுமா?


பிக்பாஸ் நிகழ்ச்சியால் மக்களின் ஒட்டுமொத்த வெறுப்பை சம்பாதித்தவர் ஜூலி. தற்போது அவர் அதனை வைத்தே பல வாய்ப்புகளை பெற்று வருகிறார். கலைஞர் டிவியில் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் கூட அவர் தொடர்ந்து சொதப்பி வந்தாலும், அதனை வைத்தே அதன் டிஆர்பியும் உயர்ந்து உள்ளது. அதோடு சினிமா வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.

விமல் நடிக்கும் மன்னர் வகையறா படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்துள்ளார். அதோடு விஜய் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதில் விஜய்க்கு ஒரு தங்கை கேரக்டர் இருப்பதாகவும், அதில் ஜூலி நடிக்கப்போவதாகவும் செய்திகள் உலா வருகின்றன. இந்த வாய்ப்புகளை அவர் சரியான முறையில் பயன்படுத்தி கொண்டால் அவருக்கு சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: