Friday, 1 December 2017

ஓகி புயல் கோரத்தாண்டவம்.. தனித்தீவாக மாறிய சுசீந்திரம்.! கன்னியாகுமரியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!



ஓகி புயலால் கன்னியாகுமரி, நாகர்கோவில், நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது.

இதில் குமரி மாவட்டத்தை பொறுத்தவரையில் பலத்த சேதத்தை சந்தித்துள்ளது. அதிலும் சுசீந்திரம் பகுதியில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அந்தப் பகுதி மட்டும் தனித்தீவாக காட்சியளிக்கிறது.

கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால் சுசிந்திரம் அருகே உள்ள வழுக்கம்பாறை என்ற இடத்தில் தாழ்வாக இருந்த பாலம் வெள்ளத்தில் அடித்து சென்றதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மின்சாரம் மற்றும் குடிநீர் இன்றி தவித்து வருவதாகவும் சுசீந்திரம் பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

எனவே போர்க்கால அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துகொடுக்கும்படி அப்பகுதியினர் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: