கட்டிப்புடி கட்டிபுடிடா பாடலை கேட்டாலே உடனே நினைவுக்கு வருபவர் நடிகை மும்தாஜ். 1980ம் ஆண்டு மும்பையில் பிறந்த இவரது இயற்பெயர் நக்மா கான். இவருக்கு தமிழ், தெலுங்கு, உருது, பஞ்சாமி, இந்தி ஆங்கிலம் என பல மொழிகள் தெரியும்.
ஆரம்பத்தில் மும்பையில் மாடலிங் செய்து வந்த இவரை டி.ராஜேந்தர் தனது மோனிஷா எனது மோனலிஷா படத்தில் அறிமுகம் செய்து வைத்தார். இவருக்கு டி.ராஜேந்தர் முதலில் மோனிஷா என்றுதான் பெயர் வைத்தார். அந்த படத்தில் கூட அந்த பெயர்தான் வரும்.
ஆனால் அந்த பெயர் அவருக்கு பிடிக்கவில்லை எனவே மும்தாஜ் என பெயரை மாற்றி கொண்டார். அதன்பிறகு அவர் விஜயுடன் குஷியில் நடித்தார். அதில் இடம்பெற்ற கட்டிப்புடி கட்டிபுடிடா பாடல் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.
அதன்பிறகு தொடர்ந்து அவருக்கு ஐட்டம் டான்ஸ் வாய்ப்புகளே வந்தது. சூஒரு கட்டத்தில் வெறுத்து போய் டி.ராஜேந்தருடன் வீராச்சாமி படத்தில் இழுத்து போர்த்தி கொண்டு நடித்தார். அது ரசிகர்களை கவரவில்லை.
மேலும் அதிக உடல் எடை காரணமாக பட வாய்ப்புகள் குறைந்தது. எஎப்படியோ கஷ்டப்பட்டு உடல் எடையை குறைத்து சிக்கென்று ஆகி மீண்டும் ராகவா லாரன்சுடன் ராஜாதி ராஜா படத்தில் வில்லியா நடித்தார். அந்த படமும் வெற்றி பெறவில்லை.
இதனால் விரக்தியின் உச்சத்திற்கு சென்ற அவர் எப்படியும் ஒருநாள் தமிழ் சினிமாவில் பெரிய இடத்தை பிடிப்பேன் என காத்திருக்கிறார். இந்த கவர்ச்சி கட்டழகிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: