Saturday, 30 December 2017

செக்யூரிட்டி செயலால் மேடையில் வலியால் துடித்த ரசிகர்..! அதட்டிய ரஜினி..!!


கடந்த செவ்வாய்கிழமை முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த ரசிகர்களை சந்தித்து வருகிறார். இந்த சந்திப்பு நாளையோடு முடிவடைகிறது. யூதனது அரசியல் நிலைப்பாடு குறித்து நாளை ரஜினிகாந்த் தெரிவிக்க உள்ளார்.

ரசிகர்கள் ஒவ்வொருவராக ரஜினியை சந்தித்து புகைப்படம் எடுத்து கொள்கின்றனர்.

இந்தநிலையில் வாகன விபத்தில் கை உடைந்த ஒருவர் ரஜினியை சந்திக்க வந்திருந்தார். அவர் மேடையில் ஏறி ரஜினிக்கு அருகில் சென்றதும் பாதுகாவலர் ஒருவர் தோள் மீது கை வைத்து இழுத்தார். அப்போது ரசிகர் வலியால் துடித்தார்.

இதனை பார்த்த ரஜினி கோபமானார். காவலரை அதட்டி நிறுத்த சொன்னார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: