தமிழில் சரத்குமாருடன் ஐயா படத்தின் மூலம் அறிமுகமாகி ரஜினியின் சந்திரமுகி மூலம் பிரபலமானவர் நயன்தாரா. இவர் முதலில் சிம்புவுடன் காதல் வயப்பட்டார். அதன்பிறகு அவருடான காதலை நிராகரித்து, பிரபு தேவாவுடன் காதல் வயப்பட்டார்.
பிரபு தேவாவை திருமணம் செய்ய மதம் கூட மாறி இருந்தார். அதன்பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். காதல் தோல்வியால் சில சினிமாவை விட்டு விலகி இருந்த நயன்தாரா பின்னர் மீண்டும் ராஜா ராணி படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
அதோடு தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். காதலனுக்கு அன்பு பரிசாக சொகுசு கார், பங்களா என வாங்கி கொடுத்துள்ளார். இருவரும் காதல் வானில் சிறகடித்து பறந்து வருகின்றனர்.
இந்த நிலையில், மீண்டும் பிரபுதேவாவுடன் நட்பை புதுப்பித்து உள்ளதாக கூறப்படுகிறது. பிரபு தேவா சென்னை வந்தால் எம்.ஆர்.சி நகரில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில்தான் தங்குவார். அதே ஓட்டலில் நயன்தாராவுக்கும் நிரந்தர அறை ஒன்று உள்ளது. அங்குதான் இயக்குனர்களை சந்தித்து கதை கேட்பாராம்.
அப்படித்தான் சமீபத்தில் ஒரு அந்த ஓட்டலில் பிரபு தேவாவை சந்தித்துள்ளார். இருவரும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தனிமையில் சந்தித்து பேசி உள்ளனர்.
அதன்பிறகு இருவருக்கும் நட்பு மலர்ந்துள்ளது. மணிக்கணக்கில் போனில் பேசி வருவதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த விக்னேஷ் சிவன் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனால் நயன்தாரா விக்னேஷ் சிவனை திருமணம் செய்வாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

0 comments: