Monday, 25 December 2017

தனிக்கட்சி தொடங்குகிறார் தினகரன்..! காலியாகிறது அதிமுக கூடாரம்...!!


ஜெயலலிதா மரணம் அடைந்த பின்னர் காலியாக இருந்த ஆர்.கே நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் சுயேட்சை வேட்பாளர் தினகரன்
அமோக வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியானது அதிமுகவுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. அது மட்டும் அல்லாமல் பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் தினகரன் அணிக்கு தாவ திட்டமிட்டுள்ளனர்.

முதல் கட்டமாக நேற்று வேலூர் எம்.பி செங்குட்டுவன் தினகரன் அணியில் சேர்ந்தார். தினகரன் வெற்றி காரணமாக அவரது ஆதரவாளர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். தினகரன் வெற்றி பெற்றால் அடுத்த 3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஏற்கனவே கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தினகரன் தனிக்கட்சி தொடங்கலாமா என்று திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ஆதரவாளர்களுடன் ரகசிய ஆலோசனை நடத்தி வருகிறார். அப்படி நடந்ததால் அதிமுக வட்டாரம் அப்படியே தினகரன் பக்கம் சாய்ந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

இதனால் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர் செல்வம் தரப்பு என்ன செய்வது தெரியாமல் கையை பிசைந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால்தான் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளனர். அதில் சில அதிரடி முடிவுகளை எடுக்க உள்ளனர்.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: