Sunday, 24 December 2017

திமுகவுக்கு டெபாசிட் போக காரணம் என்ன தெரியுமா? வெளிவந்த அதிர்ச்சி தகவல்...!!


நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் தினகரன் அமோக வெற்றி பெற்றார். இவரது வெற்றி தமிழக மக்களின் புருவத்தையே உயர்த்த வைத்துள்ளது. மேலும் அதிமுகவுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

திமுகவுக்கு அதிர்ச்சிதான் என்றாலும் பெரிய அளவில் இல்லை என்றுதான் கூறப்படுகிறது. அவர்களுக்கு தினகரன் வெற்றி பெற்றதிலும் ஒரு வகையில் சந்தோஷம்தான்.

மேலும் ஆரம்பத்தில் இருந்தே திமுக வேட்பாளராக மருதுகணேசை அறிவித்தது மூத்த தலைவர்களுக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர்கள் யாரும் திமுகவுக்காக வேலை செய்யவில்லை. வேட்பாளர் மருது கணேஷ்தான் பம்பரமாக சுழன்றாரே தவிர மற்றவர்கள் யாரும் வேலை செய்யவில்லை.

சில திமுகவினர் தினகரனுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி வேலை செய்துள்ளனர். அவர்கள் விருப்பமும் தினகரன் ஜெயிக்க வேண்டும். தினகரன் வெற்றி பெற்றால் அதிமுக தானாக காணாமல் போய்விடும்.

எனவே திட்டமிட்டே திமுகவினர் பகிரங்கமாக தினகரனுக்கு ஆதரவாகவும், மருதுகணேசுக்கு உள்ளடி வேலையும் செய்துள்ளனர் என ஆர்.கே.நகர் வட்டாரம் தெரிவிக்கிறது.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: