Tuesday, 26 December 2017

டாப் ஹீரோயினாக இருந்த சிரிப்பழகி லைலா..! இவரின் தற்போதைய நிலை...!!


1980ல் கோவா மாநிலத்தில் பிறந்தவர் லைலா. இவர் கடந்த 1996ம் ஆண்டு தனது 16வது வயதில் இந்தியில் வெளிவந்த துஸ்மன் துனியா கா என்ற படத்தில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து தமிழில் 1999ம் ஆண்டு கள்ளழகர் படத்தில் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவிந்தது. தீனா, உன்னை நினைத்து, நந்தா, பிதாமகன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்தார். அந்த நேரத்தில் அவருக்கு ஈரான் நாட்டை சேர்ந்த மெஹதீன் என்ற தொழிலதிபருடன் காதல் ஏற்பட்டது.

7 வருடம் காதலித்த இவர்கள் இருவரும் கடந்த 2006ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு கண்டிப்பாக சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று கூறி இருந்தார்.

ஆனாலும் அவரை தேடி பல சினிமா வாய்ப்புகள் வந்தது. ஆனாலும் அவர் அதனை ஏற்க மறுத்தார். தற்போது அவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களை பார்த்து கொண்டு வீட்டோடு இருக்கிறார் சிரிப்பழகி லைலா.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: