பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து யாரும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்நிகழ்ச்சி பெரும் பரபரப்பை கிளப்பியதோடு ரசிகர்களிடம் காலப்போக்கில் மிகப் பெரிய வரவேற்பையும் பெற்றது.
இந்நிகழ்ச்சியின் 11வது சீசன் பிரபல தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கி வருகிறார். இதில் ஹினா கான் என்ற பிரபல நடிகை பங்கேற்றுள்ளார்.
தமிழில் பிரபலங்களின் உறவினர்கள் வந்த சீசனை போல் ஹிந்தியில் நடந்து வருகிறது. ஹினா கானின் காதலர் ராக்கி ஜெயிஸ்வால் நிகழ்ச்சிக்கு செல்ல இருவரும் தங்களது காதலை பகிர்ந்துகொண்டனர்.
பின் அவர் நிகழ்ச்சிவிட்டு வெளியே செல்ல ஹினா கான் என்னை உன்னோடு அழைத்து செல் என்று கதறி கதறி அழுகிறார். இவரின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

0 comments: