Monday, 25 December 2017

பெண் ரூபத்தில் பிரபல நடிகருக்கு வந்த எமன்.. என்ன ஆனார் தெரியுமா?


சமீப காலமாக சினிமா வட்டாரத்தில் உயிரிழப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சிலர் சாலை விபத்தில் உயிழந்தனர். தற்போது இதே போன்ற ஒரு சம்பவம் ஐதராபாத்தில் நடந்துள்ளது.

அதுபோல தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் ஆர்.கே. இவர் தெலுங்கில் ஐதராபாத் நவாப் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும் சில படங்களையும் தயாரித்துள்ளார்.

இவர் ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் ரோட்டில் டிசம்பர் 24ம்  தேதி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த இன்னொரு கார் இவரின் மீது வேகமாக மோதியது.

இதில் ஆர்.கேவின் கார் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் காயத்துடன் உயிர் தப்பி உள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

எதிர்முனையில் காரை அதிவேகமாக காரை ஓட்டி வந்தவர் ஒரு பெண் ஆவார். அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: