ரூநடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் தினகரன் அமோக வெற்றி பெற்றார். இவரது வெற்றி தமிழக மக்களின் புருவத்தையே உயர்த்த வைத்துள்ளது. மேலும் அதிமுகவுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
திமுகவுக்கு அதிர்ச்சிதான் என்றாலும் பெரிய அளவில் இல்லை என்றுதான் கூறப்படுகிறது. அவர்களுக்கு தினகரன் வெற்றி பெற்றதிலும் ஒரு வகையில் சந்தோஷம்தான்.
கூஏனென்றால் தினகரன் வெற்றி பெற்றால் அவர் பக்கம் அதிமுக எம்.எல்.ஏக்கள் தாவுவார்கள். அதன்படி எம்.எல்.ஏக்கள் தாவினால் எடப்பாடி அரசுக்கு நிச்சயம் ஆபத்து ஏற்படும். கவிழக் கூட வாய்ப்பு உள்ளது. அப்படி கவிழும் பட்சத்தில், தினகரன் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களை திமுக பக்கம் சாய்த்து கொண்டால் போதும்.
அப்போது திமுகவுக்கு ஆட்சி அமைக்க கூட வாய்ப்பு உள்ளது. இதனை மனதில் வைத்துதான் திமுக கூட மறைமுகமாக தினகரனுக்கு வேலை பார்த்ததாக கூறப்படுகிறது. எப்படியோ கூட்டி கழித்து பார்த்தால் கணக்கு சரியாகத்தான் வருகிறது.

0 comments: