Friday, 1 December 2017

வடிவேலு தனது மகள்கள் திருமணத்திற்கு பிரபலங்களை அழைக்காதது ஏன்?


தமிழ் திரையுலகில் நகேஷ், கவுண்டமணிக்கு பிறகு கமெடியில் தனி அத்தியாயம் படைத்தவர் நடிகர் வடிவேலு. இவருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது.

இரண்டாவது மகள் கார்த்திகா. இவர் பிறந்தது மதுரையில் என்றாலும், வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். இவர் பள்ளியில் சிறந்த விளையாட்டு வீராங்கனையும் கூட.
இவர் பள்ளி படிப்பை முடித்த பின்னர் எம்.காம் படித்தார். பின்னர் சி.ஏ முடித்து தற்போது அக்கவுண்டன்டாக பணியாற்றி வருகிறார். கடந்த நவம்பர் மாதம் 11ம் தேதி கணேஷ் குமார் என்பவரை கார்த்திகா திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமணம் மதுரை ராஜா முத்தையா திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த திருமணத்தில் திரைபிரபலங்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர். வடிவேலு அழைப்பு விடுத்திருந்தால் ரஜினி, கமல் உள்பட அனைத்து பிரபலங்களும் பங்கேற்று இருப்பார்கள்.

ஆனால் வடிவேலு காதும் காதும் வைத்தது போல திருமணத்தை நடத்தி முடித்து விட்டார். தனது மகள்கள் மீது மீடியா வெளிச்சம் படக்கூடாது என்பதற்காக இப்படி எளிமையாக திருமணத்தை நடத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் வடிவேலு தரப்பில் உறுதியாக காரணம் இதுவரை சொல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: