நடந்த முடிந்த ஆர்.கே நகர் தேர்தலில் இன்று வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.
வாக்கு எண்ணும் முதல் சுற்றிலிருந்தே தினகரன் முன்னிலை பெற்று வருகிறார்.
இதனால் ஆர்.கே நகரில் இவரின் வெற்றி கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. தினகரனின் வெற்றி உறுதியானதால் அதிமுக மற்றும் திமுகவினர் இடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது .
கடந்த தேர்தலில் ஜெயலலிதா பெற்ற வாக்கு சதவிகிதத்தை முறியடித்த தினகரன் மிகபெரிய வெற்றி பெறுவது உறுதி.
இந்நிலையில் எடப்பாடி அணியில் இருக்கும் சட்ட மன்ற உறுப்பினர்கள் தினகரன் அணிக்கு அணி தாவ திட்டமிட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அப்படி எம்.எல்.ஏக்கள் அணி மாறினால் எடப்பாடி அரசுக்கு பின்னடைவு ஏற்படும் நிலை உருவாகும்.

0 comments: