Friday, 1 December 2017

அஜித்தை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்ற அனிருத்.. அப்படி என்ன செய்தார் தெரியுமா?


வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் சிவாவும் அஜித்தும் நான்காவது முறையாக ‘விசுவாசம்’படத்தில் இணைகின்றனர். ‘விவேகம்’ படத்தை தயாரித்த ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனமே இந்தப்படத்தையும் தயாரிக்கிறது. விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் துவங்கவிருக்கிறது.


இந்த படத்திற்கான கதாநாயகி, மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு தற்போது நடந்து வருகிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கவிருக்கிறார். இந்த தகவலை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.

வேதாளம், விவேகம் படத்துக்கு இசையமைத்த அனிருத்துக்கு இப்படத்தில் வாய்ப்பு இல்லை. என்ன காரணம்? விவேகம் படத்துக்கு இசையமைத்தபோது குறிப்பிட்ட காலத்தில் பாடலை கொடுக்காமல் அநியாயத்துக்கு அலையவிட்டிருக்கிறார்.

அமெரிக்காவுக்கு இசைநிகழ்ச்சி நடத்த வாய்ப்பு வந்ததும் விவேகம் பாடல்களை அவசர அடியாக அடித்துக் கொடுத்தாராம். பின்னணி இசையமைக்கும் போது இன்வால்வ்மெண்ட்டே இல்லாமல் செய்திருக்கிறார். இந்த தகவல் அஜித் காதுக்குப் போனதால் விசுவாசம் படத்திற்கு அவர் வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம் அஜித்.

மேலும், வேலைக்காரன் படத்திற்காக அனிருத் இசை மற்றும் குரலில் வெளியான இறைவா..! என்ற பாடல் முதலில் விவேகம் படத்திற்காக கம்போஸ் செய்தது தானம். ஆனால், அனிருத் அந்த பாடலை வேலைக்காரன் படத்திற்கு மாற்றி விட்டுவிட்டார் எனவும் இதனால் கோபமடைந்த அஜித் விஸ்வாசம் படத்தில் அனிருத் வேண்டாம் என்று கூறிவிட்டதாகவும் கிசுகிசுக்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: