எந்த பெற்றோரும் காதலை ஏற்று கொள்வதில்லை. எனவே காதலுக்கு எதிர்ப்பு எழுந்தால் உடனே காதலர்கள் தற்கொலை முடிவை தேடி கொள்வது வழக்கமாகி வருகிறது.
அதுபோல அமரேஷ் (21) என்ற வாலிபரும் பாக்யாஸ்ரீ (16) என்ற மாணவியும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே இருவரும் ஊரை விட்டு ஓடி சென்றனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பாக்யாஸ்ரீயின் பெற்றோர் போலீசில் தனது மகளை அமேரேஷ் கடத்தி சென்று விட்டதாக புகார் அளித்தனர். போலீசார் இருவரையும் தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று கிராமத்தின் அருகில் உள்ள அமரேஸ்வரா கோயில் அருகில் காதலர்கள் இருவரும் வாயில் நுரை தள்ளியபடி பிணமாக கிடந்தனர். அருகில் பூச்சி கொல்லி மருந்து இருந்தது. இது குறித்து அப்பகுதியினர் பார்த்து போலீசிற்கு தகவல் அளித்தனர்.
வழக்கு பதிவு செய்த போலீசார் சடலங்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கர்நாடக மாநிலம் ரெய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள லிங்கசூரில் நடந்துள்ளது.

0 comments: