Saturday, 30 December 2017

கண்ணா வந்துட்டேன்..! நான் அரசியலுக்கு வந்துட்டேன்..! ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு...!!


நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என எதிர்ப்பார்ப்பு கடந்த 1996ம் ஆண்டு முதலே எழுந்து வருகிறது. ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் அவர்கள் யாருக்கு ஆதரவு தருவார் என்ற கேள்வி எழுந்து வந்தது.

மேலும் கடந்த சில நாட்களாகவே ரஜினிகாந்த் தனிக்கட்சி ஆரம்பிக்க போகிறார். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 26ம் தேதி முதல் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். ரசிகர்கள் சந்திப்பின் முதல் நாளில் 31ம் தேதி அரசியல் நிலைப்பாடு குறித்து தெரிவிப்பதாக தெரிவித்து இருந்தார்.

அதன்படி இன்று ரசிகர்கள் முன்னிலையில் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அதில், நான் அரசியலில் குதிக்க தயாராகி விட்டேன். போருக்கு தயாராகி விட்டேன். வரும் உள்ளாட்சி தேர்தலில் நேரம் குறைவாக இருப்பதால் அதில் போட்டியிட போவதில்லை.

உரிய நேரத்தில் தனிக்கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவேன். எனக்கு பதவி ஆசை கிடையாது. பதவிக்கு ஆசைப்பட்டிருந்தால் எனக்கு 45 வயதிலேயே என்னை பதவி தேடி வந்தது. 45 வயதிலேயே பதவிக்கு ஆசைப்படாத எனக்கு 68 வயதிலா ஆசை வரும் என்றார்.

இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: