Saturday, 30 December 2017

ரஜினியின் அறிவிப்புக்கு அதிரடி ட்விட் போட்ட கமல்..! என்ன சொல்லி உள்ளார் தெரியுமா?


ரஜினிகாந்த்துக்கு முன்பாக நான் அரசியலுக்கு வந்து விட்டேன் என கூறியவர் நடிகர் கமல்ஹாசன். இவர் அவ்வப்போது ட்விட்டரில் எதாவது பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம்.
இவர் ஒரு ட்விட்டரில் செய்தியை பதிவிட்டால் அது நிச்சயம் அரசியல்வாதிகளுக்கு கிலியை ஏற்படுத்தும். சமீபத்தில் கூட ஆப் ஒன்றை அறிமுகம் செய்து இருந்தார்.

ஆர்.கே நகர் தேர்தல் பணம் புழங்கிய போதே அது குறித்து ட்விட்டரில் எதாவது பதிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் பதிவிடவில்லை.

இந்த நிலையில் இன்று ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவதாக அறிவித்து உள்ளார். இது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இன்று கமல் ஒரு நாள் முன்னதாகவே புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து இந்தார்.

அதோடு ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டர் பதிவிட்டுள்ளார். அதில் சகோதரர் ரஜினியின் சமூக உணர்வுக்கும் அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள். வருக வருக என பதிவிட்டுள்ளார் .


SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: