Saturday, 2 December 2017

நடிகர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறார் விஷால்..! வலுக்கும் எதிர்ப்பு குரல்...!!


ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் நடிகர் விஷால், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் களத்தை ஏதோ நட்சத்திர கிரிக்கெட் போட்டி என நினைத்துக் கொண்டு களமிறங்கியுள்ளார் விஷால். அவர் எதற்காக அரசியலுக்கு வருகிறார்? யாரை எதிர்த்து போட்டியிடப் போகிறார்? என எந்த கேள்விக்கும் விடையே இல்லாமல் களத்துக்கு வருவதாக கூறியுள்ளார் விஷால்.



இந்த விவகாரம் தயாரிப்பாளர் சங்கத்தில் புகைச்சலை கிளப்பியுள்ளது. தயாரிப்பாளர் சங்கம் அரசியல் சார்பற்றது; தலைவராக இருக்கும் விஷால் அரசியலுக்குப் போவது அவரது உரிமை.

அவருக்காக தயாரிப்பாளர் சங்கத்தில் நாளை பிரச்சனைகள் வந்துவிடக் கூடாது; ஆகையால் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை விஷால் ராஜினாமா செய்துவிட்டு போட்டியிடட்டும் என்கிற கலகக் குரல் இப்போது வெடித்துள்ளது.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: