Thursday, 4 January 2018

35 வருடங்களாக ஓட்டை சைக்கிளில்..! கம்பெனி கம்பெனியாக ஏறி வாய்ப்பு கேட்கும் பிரபல நடிகர்...!!


தூறல் நின்னு போச்சு படத்தில் மாமா என்று செந்தாமரையை கொஞ்சிபடி நடித்து இருப்பவர் நடிகர் சூரியகாந்த். இவர் தஞ்சை மாவட்டம் பூண்டி கிராமத்தை சேர்ந்தவர்.

சினிமா ஆசையில் கல்லூரி படிப்பை பாதியில் கைவிட்டு சென்னை வந்தார். ஆரம்பத்தில் பல போலி தயாரிப்பாளர்களிடம் சினிமா வாய்ப்புக்காக பணத்தை கொடுத்து ஏமாந்தார்.

எப்படியோ வசந்தகாலம் என்ற படத்தில் முதல் வாய்ப்பு பெற்றார். அதன்பிறகு அடிச்சுவடுகள் படத்தில் நல்ல வேடம் கிடைத்தது. அதன்பிறகுதான் துறல் நின்னு போச்சு படத்தில் நடித்தார். இதில் பெயர் சொல்லும்படியான வேடம் கிடைத்தது.

அப்போது பாக்கியராஜ் கூறும்போது, வில்லன் வேடங்களை தேர்ந்ªடுத்து நடியுங்கள் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று அறிவுரை கூறினார். அதன்படி கிடைத்த வேடத்தில் எல்லாம் நடித்தார். கிழக்கு சீமையிலே போன்ற ஒரு சில படங்கள் மட்டுமே இவருக்கு நல்ல பெயரை பெற்று  தந்தது.

ஆனாலும் பெரிதாக வாய்ப்புகள் இல்லை, வருமானம் இல்லை. இன்று வரை  மாற்றம் இல்லை. ஒரு ஓட்டை சைக்கிளில் சென்று கம்பெனி கம்பெனியாக ஏறி வாய்ப்பு கேட்டு வருகிறார். இதுதான் சினிமா உலகம்.


SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: