அந்த காலத்தில் சிவாஜிகணேசன், எம்.ஜி.ஆருக்கு நிகரான புகழை பெற்றிருந்தவர் நடிகையர் திலகம் சாவிரித்ரி. அதே போல நடிகர்களுக்கு இணையாக சம்பாதித்து சென்னை, ஊட்டி, கொடைக்கானர் போன்ற இடங்களில் மாட, மாளிகைகளை வாங்கி போட்டார்.
பல ஸ்டுயோக்களுக்கும் அதிபராக இருந்தார். இவர் நடிகர் ஜெமினி கணேசனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சாவித்ரி தான்னை யாரும் அடக்கி ஆளக் கூடாது என்று நினைப்பவர். அதே நேரம் ஜெமினி கணேசன் எல்லோரும் தனக்கு கட்டுப்பட்டுதான் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்.
இதுதான் இவர்கள் இருவருக்கும் விரிசலை ஏற்படுத்தியது. மேலும் கணவனின் பேச்சை மீறி படங்கள் எடுத்தார். அவை அனைத்துமே தோல்வியை தழுவியது. இதனால் சொத்துகளை இழந்தார். குடிபோதைக்கு அடிமையானார். சென்னை அண்ணா நகரில் ஒரு சிறிய வாடகை வீட்டில் குடியேறினார்.
சூஒரு நாள் குடிக்காமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு வந்தார். குடிக்க பணம் வேண்டி, படங்களில் கிடைத்த சிறு சிறு வேடங்களில் எல்லாம் நடித்தார். குடியால் உடல் நலம் பாதிக்கப்பட்டார். ஒரு நாள் குடிபோதையில் சுயநினைவின்றி ரோட்டில் படுத்து கிடந்தார்.
இதனை பார்த்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். சுமார் ஒன்றரை ஆண்டுகாலம் கோமாவில் படுத்து கிடந்தவர். உடல் உருக்குலைந்து கடந்த 1981ம் ஆண்டு உயிரிழந்தார். செல்வ செழிப்பில் வசித்தவர் கடைசியில் செலவுக்கு கூட பணமின்றி வாடகை வீட்டில் உயிரிழந்தார். இவரது வாழ்க்கை மற்றவர்களுக்கு ஓர் உதாரணம்.

0 comments: